Posts

Showing posts from 2011

என் அன்பு காதலிக்கு...

உன்னை பார்க்கும் போது உன் தோள்மீது சாய்ந்திருக்க ஆசைப்பட்டேன்... உன் அருகில் நிற்கும் போது உன் கை பிடித்து நடக்க ஆசைப்பட்டேன்... உன்னுடன் நடக்கும் போது பாதையின் தூரம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... உன் முகம் பார்க்கும் போது காலத்தின் அளவு அதிகரிக்க ஆசைப்பட்டேன்... உன் மடியில் முகம்  புதைத்திருக்கும்  வேளையில்  மண்ணுக்குள் அடங்கிவிட ஆசைபடுகிறேன்... எனக்கு இந்த வரங்களை தருவாயா என் மதிப்பிற்குரிய இதயமே???  

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!!

இதுவரை எனக்கில்லை முகவரிகள்!!! அதை நான் கண்டேன் உன் புன்னகையில்! இந்த வரிகளை நான் உன்னிடம் உணர்ந்த வேளையில் உனக்குள் நான் கரைய ஆசைப்பட்டேன்... இன்று முழுவதுமாக உன்னிடம் கரைந்து விட்டேன்... உன்னிடம் நான் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும், அதன் மீது கட்டப்பட்ட காதலையும் தான்!!! இடையில் இந்த பொருள் சார்ந்த உலகத்தின் பிடியில் என் சாம்பல் மட்டுமே மிஞ்சுமோ என பயப்படுத்துகிறாய்  நீ???!!! உன்னிடம் உள்ள வேறு எந்த ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை... ஏனெனில் என் நம்பிக்கை அன்பு என்னும் நம்பிக்கை மட்டுமே... ஆனால் வெறும் அன்பு மட்டுமே எல்லாம் கொடுத்து விடாது என்ற நிஜ வாழ்வு உண்மைகளையும் அறிந்தவன் நான்!

யதார்த்தம்!

சில பேருக்கு அவ்வபோது தோன்றும் இந்த கேள்வி! யதார்த்தம் என்றல் என்ன? கண்முன் நடக்கும் சாதாரண விஷயங்கள் எல்லாம் யதார்த்தம் தானோ!! யதார்த்தம் என்பது நிதர்சனம், உண்மை நடப்பு, இப்பொழுது நடக்கும் ஒரு செயல்... உண்மையில் யதார்த்தம் என்பதை நமக்குள் புரிந்து கொண்டிருந்தால் எந்த வித சச்சரவுகளும் கண்டிப்பாக வராது. யதார்த்தவாதிகள் உண்மையை மையம் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படுவது தொட்டில் பழக்கம். ஆராய்ந்து செயல் படுவது என்றல் நேரத்தை வீணடித்து சிந்திப்பது அல்ல... அது சிந்தனையை சீர் தூக்கி எடுக்கப்படும் ஒரு முடிவு! யாரை எல்லாம் பாதிக்குமோ அவர்களை எண்ணி ஆராய்வது.. ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம். எனக்கு பிடித்த யதார்த்தவாதி நவ-திருப்பதி பகுதிகளில் உள்ள ஒரு சிவன் கோவில் அய்யர். எப்படி என்றால்.. என் நெற்றியில் திருநீறு வைத்துவிடும் போது  என் கண்களில் தூசி விழ கூடாது என்பதற்காக சிவனை நினைத்து சிந்தையை திறந்துகொள்; கண்களை மூடிக்கொள்

நீயே என் சிறகு...!!!

நான் தனியே சுற்றி திரியும் ஒரு பறவை என்னுடைய எல்லா பயணங்களும் ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டுமே இருக்கும் அது என் சிறகுகளை தேடுவது மட்டுமே! நீ என்னுடைய சிறகாக  இருக்கும் வரையில் நான் உயிர் விட்டு பறக்க மாட்டேன்...

நான்காவது பெட்டி!!!

சென்ற வாரம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல நான் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை-க்கு பறக்கும் ரயிலில் ஏறினேன். அது மாலை 7 :00 மணி - வெள்ளிக்கிழமை வேறு. பொதுவாக கணினி மற்றும் கணினி சார்ந்த துறைகளில் பணி புரிபவர்கள் அதிகமாக ரயிலில் பயணிக்கும் நேரம் அது. நானும் வழக்கம் போல எஞ்சினில் இருந்து 3 வது பெட்டியில் ஏறிக்கொண்டேன். எனக்கு அடுத்த 4 வது பெட்டி vendor coach என்னும் சரக்குகள் வைக்கும் பெட்டி. வழக்கமாக மிகவும் அதிகமானவர்கள் நின்று செல்லும் பெட்டி அதுவாகத்தான் இருக்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டியில் ஆட்கள் இல்லை - மன்னிக்கவும் - 2 பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் மன்னிக்கவும்-3 பேர் இருந்தனர் - 3 ல் 2  பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். இன்னொருவர் பிணமாக இருந்தார் (அவனா இல்லை அவளா?). மீதமுள்ள இரண்டு பேரும் அந்த பிணத்திற்கு பாடிகார்ட். எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து ரயில்வே நடைபாதையில் அநாதை பிணமாக விழுந்து இப்பொழுது அதே ரயிலில் சென்னை சென்ட்ரல்-ல் உள்ள பொது மருத்துவமனைக்கு இருவர் துணையுடன் சென்று கொண்டிருக்கும் அந்த உடல் பற்றி எனக்கு தெரிந்தது இ

கோபம் என்னும் சக்தி!

திடீரென்று என் மனம் என்னிடம் இப்படி பேச தொடங்கியது: சமீப நாட்களாக எனக்கு அதிகமான மிகவும் வேகமாக கோபம் வருகிறது. ஆனால் அதனை நான் எனக்குள் மிகுந்த அழுத்தம் கொடுத்து வெளியே வராமல் தடுத்து கொண்டிருக்கிறேன். எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்தும் வீரனை கண்டு எனக்கு பயம் இல்லை. ஆனால் என்னுடைய கோபத்தை கண்டு பயப்பட வேண்டி இருக்கிறது. என்னுடைய கோபத்தினால் நான் இழந்த விஷயங்கள் என்னை பயப்பட வைக்கிறது. அந்த பயம் என்னை துரத்துகிறது. "எங்கே என் கோபம் எனக்கு பிடித்தவர்களை என்னிடம் இருந்து பிரித்து விடுமோ என்று என்னும்போது என் கோபம் சிரிப்பாக, சிந்தனையாக வேறு உருவம் எடுக்கிறது." நான் கடந்து வந்த பாதையை பார்த்த போது நான் எங்கெல்லாம் கோபப்பட்டு மிக உறுதியாக இருந்திருக்கிறேனோ அங்கெல்லாம் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இழப்புகளுக்காக நான் இதுவரை வருத்தப்பட்டதில்லை. இன்று இழப்புகளுக்காக நான் அஞ்சுகிறேன். விடியல் வரும் வரை விழித்திருக்கப் போகிறேன்! நன்றி...

Discover Yourself!

The purpose of life is to discover your gift; The value of life is to give it away!

மரணத்தின் பயணம்!!!

ஒரு நாள் பிறந்த நாளும், இறந்த நாளும் திடீரென்று சந்தித்துக் கொண்டனர். உண்மையில் அன்று பிறந்த நாளுக்கு பிறந்த நாள், இறந்த நாளுக்கு இறந்த நாள். இருவருக்குமே முக்கியமான இந்த நன்னாளில்??!! தத்தமது மகிழ்சிக்காக மிகுந்த விமரிசையாக கொண்டாட்டங்களை நடத்தினார்கள்.!!! பிறப்பு தனது பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், இறப்பு தனது இறந்த நாளை மிகவும் வருத்ததுடனும் அவரவர் பாணியில் கொண்டாடினர். இந்த இருவர் மனதிலும் எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. இதனைப் பற்றி பேசுவதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக நினைத்தனர் இந்த கொண்டாட்ட தினத்தை... உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு முக்கியமான நாட்கள் (தருணங்கள்) உள்ளன. அது அந்த உயிர் இந்த உலகிற்கு வந்த நாள் மற்றும் இந்த உலகில் இருக்கும் கடைசி நாள்! இது நாள் கணக்கு. இதனை பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்றும் சொல்லலாம்... இதில் முதல் நாள் "பிறந்த நாள்", இறுதி நாள் "இறந்த நாள்" (இதையும் கூட பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்று சொல்லலாம்) இந்த 2 நாட்களுக்கும் அல்லது நொடிகளுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு இடைவெளி நாம

நானும் நீயும்!

நம்மைப் பற்றி நினைக்கும் போது கலீல் கிப்ரானின், இந்த  வரிகள் என் எண்ணங்களில் வந்து செல்வதை தவிர்த்திட முடியவில்லை... "ஓ என் நண்பனே! நீ என் நண்பனல்ல; ஆனால் இதை எப்படி நான் உனக்கு புரிய வைப்பேன்? என் வழி தனி வழி; அது உன் வழியல்ல; இருந்தாலும் நாம் இருவரும் கையோடு கை கோர்த்து ஒன்றாக இணைந்து நடக்கின்றோம்!" அது அப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் இன்று நான் உறங்க விழி மூடினால் என் இமைகளுக்கு நடுவில் நீ! மீளாத்துயிலில் நான் செல்லும் முன் என் முன்னால் நீ வந்து விடு என் இரவல் பெற்ற உயிராக! படிக்க நேரம் ஒதுக்கிய தங்களுக்கு நன்றி!

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

"உன் வார்த்தைகளை விட உன் மவுனம் மிகவும் கொடுமையானது!" இந்த அளவு உன்னை பற்றி என்னை நினைக்க வைத்த  போதும் விளங்கவில்லை எனக்கு உன்னுடன் என்ன வகை உறவு என்று.... உன்னுடன் சாதரணமாக பேசிய நாட்களில் எல்லாம் இது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்றும் நான் கனவும் காணவில்லையடி என் கண்ணம்மா! திரைப்படம் ஒன்றில் கேட்டேன் ஒரு வசனத்தை இப்படி:  அது வைரமுத்துவின் வைர வரிகள் என்கிறது என் நினைவு பேழை: அந்த வரிகளை எனக்கு, என் உணர்வுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திய போதும் எனக்கு தெரியவில்லை உன்னுடன் என்ன வகை உறவு என்று.... அது விளங்காமல் போனதால் தான் நான் சொல்ல வந்த அந்த வரிகளை இன்னும் தட்டச்சு செய்யாமல் இழுத்து கொண்டிருக்கிறேனோ! இது என்ன கொடுமை என்று படிக்கும் நீ நினைக்கலாம்! ஆம்! நான் புலம்புவதற்கு படிக்கும் நீ ஏன் குழம்ப வேண்டும்!??! என் செல்வமே! இதோ அந்த வரிகளை இனியும் தாமதம் இல்லாமல் உனக்கு நான் தருகிறேன்... "காக்கை குருவி கூட உன்னை கண்டு கொள்ளாது, ஆனால்  உலகமே உன்னை பார்த்து கொண்டிருப்பதாக நீ நினைப்பாய்" படிக்க நேரம் ஒதுக்கிய உங்களுக்கு என் நன்றி!