நான்காவது பெட்டி!!!

சென்ற வாரம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல நான் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை-க்கு பறக்கும் ரயிலில் ஏறினேன். அது மாலை 7 :00 மணி - வெள்ளிக்கிழமை வேறு. பொதுவாக கணினி மற்றும் கணினி சார்ந்த துறைகளில் பணி புரிபவர்கள் அதிகமாக ரயிலில் பயணிக்கும் நேரம் அது.

நானும் வழக்கம் போல எஞ்சினில் இருந்து 3 வது பெட்டியில் ஏறிக்கொண்டேன். எனக்கு அடுத்த 4 வது பெட்டி vendor coach என்னும் சரக்குகள் வைக்கும் பெட்டி. வழக்கமாக மிகவும் அதிகமானவர்கள் நின்று செல்லும் பெட்டி அதுவாகத்தான் இருக்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டியில் ஆட்கள் இல்லை - மன்னிக்கவும் - 2 பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் மன்னிக்கவும்-3 பேர் இருந்தனர் - 3 ல் 2  பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். இன்னொருவர் பிணமாக இருந்தார் (அவனா இல்லை அவளா?). மீதமுள்ள இரண்டு பேரும் அந்த பிணத்திற்கு பாடிகார்ட்.

எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து ரயில்வே நடைபாதையில் அநாதை பிணமாக விழுந்து இப்பொழுது அதே ரயிலில் சென்னை சென்ட்ரல்-ல் உள்ள பொது மருத்துவமனைக்கு இருவர் துணையுடன் சென்று கொண்டிருக்கும் அந்த உடல் பற்றி எனக்கு தெரிந்தது இந்த வரிகள் மட்டுமே... மீளாத்துயிலில் உறங்க சென்று விட்ட நண்பரே!!! நீங்கள் யாராக இருந்தாலும் இனி உங்களுக்கு மரணம் இல்லை...

அது சரி நான் ஏன் இத பத்தி இங்கே எழுதணும் சார்... ஒரு சின்ன difference அது என்ன difference ?

வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டு அகால மரணம் அடைந்த அந்த ஒரு பிணத்தை பார்த்து விட்டு அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் யாருமே அந்த பெட்டியில் ஏறவில்லை. தவறுதலாக ஏறி விட்டாலும் மிக வேகமாக அடுத்த compartment -க்கு அடுத்த station -ஐ அடைந்ததும் இறங்கி ஓடினர். அது பிணமா இல்லை பேயா? அது ரயில் பெட்டியா-பிணவறையா? என்று ஒரு சந்தேகம்... மேலும் இது இயற்கைக்கு மாறான நிகழ்வும் அல்ல...

மெதுவாக மந்தைவெளி ஸ்டேஷன் வந்ததும் என் பெட்டியின் இட நெரிசல் காரணமாக நான் வெளியே தள்ளப்பட்டேன். மெதுவாக நடந்து வண்டி கிளம்புவதற்குள் ஓடி போய் நான்காவது பெட்டியில் ஏறிய பொது தான் மேலே எழுதப்பட்ட விஷயங்கள் நடந்தன... இதில் என்ன வேறுபாடு - difference ?

லைட் ஹவுஸ் ஸ்டேஷன்-இல் அந்த நான்காவது பெட்டியில் வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் ஒரு சதுரமான பெரிய கண் கண்ணாடியுடன் ஒருவர் ஏறினார். சுமார் 55 வயது மதிக்கத்தக்க உருவம்.  எனக்கு ஆச்சரியம்- நம்மை விட தைரியமான ஒருவர் இங்கிருக்கிறார் என்று. அது நிலைக்கவில்லை. அவருக்கு கண் தெரியாது. ஆனால் உணர்வுகள் உண்டு என்பது நன்றாக தெரிந்தது. ஆனாலும் அவரும் நானும் அந்த நான்காவது பெட்டியில் இருந்து இறங்கவில்லை.

கடைசியாக இருவரும் சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியபோது படிகளில் நடந்து கொண்டே இது பற்றி பேசி கொண்டு வந்தோம். அப்போது அவர் சொன்ன வார்த்தை - "நாம் அங்கு பார்த்தது??!! வாழ்ந்த பிணம்... நீங்களும் நானும் வாழும் பிணம்" . இப்படி சொல்லி விட்டு அவர் ஆட்டோ பிடித்து காமாட்சி அம்மன் கோவில் தெருவிற்கு சென்று விட்டார். நான் இன்னும் இதை எழுதி கொண்டிருக்கிறேன்...


Message :

சாதரணமாக இருக்கும் நமக்கும் அசாதரணமான வார்த்தைகளை வெளிபடுத்திய அவருக்கும் உள்ள வித்தியாசம் தான் அந்த difference .

Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

அழகும் அவலட்சணமும்