கோபம் என்னும் சக்தி!

திடீரென்று என் மனம் என்னிடம் இப்படி பேச தொடங்கியது:

சமீப நாட்களாக எனக்கு அதிகமான மிகவும் வேகமாக கோபம் வருகிறது. ஆனால் அதனை நான் எனக்குள் மிகுந்த அழுத்தம் கொடுத்து வெளியே வராமல் தடுத்து கொண்டிருக்கிறேன். எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்தும் வீரனை கண்டு எனக்கு பயம் இல்லை. ஆனால் என்னுடைய கோபத்தை கண்டு பயப்பட வேண்டி இருக்கிறது.

என்னுடைய கோபத்தினால் நான் இழந்த விஷயங்கள் என்னை பயப்பட வைக்கிறது. அந்த பயம் என்னை துரத்துகிறது.

"எங்கே என் கோபம் எனக்கு பிடித்தவர்களை என்னிடம் இருந்து பிரித்து விடுமோ என்று என்னும்போது என் கோபம் சிரிப்பாக, சிந்தனையாக வேறு உருவம் எடுக்கிறது."

நான் கடந்து வந்த பாதையை பார்த்த போது நான் எங்கெல்லாம் கோபப்பட்டு மிக உறுதியாக இருந்திருக்கிறேனோ அங்கெல்லாம் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இழப்புகளுக்காக நான் இதுவரை வருத்தப்பட்டதில்லை. இன்று இழப்புகளுக்காக நான் அஞ்சுகிறேன்.

விடியல் வரும் வரை விழித்திருக்கப் போகிறேன்!

நன்றி...



Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

அழகும் அவலட்சணமும்