Posts

Showing posts from 2012

அழகும் அவலட்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன. நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது. பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது. அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான அழகை சந்தித்த  சிலர்,  அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள்.  வேறு சிலர் அழகான  உடை அணிந்த அவலச்சணத்தின்   அழகில்   மயங்கி   கொண்டாடி கொண்டிருகிறார்கள்...

ஆசை

சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளா ல் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான். ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். கதை - 1 உணர்த்தியது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..

ஜென் - சிறுவனும் குருவியும்

Image
படித்ததில் பிடித்தது! "பணம் சம்பாதியுங்கள் - ஆனால் அதை பெறுவதற்கு நீங்கள் எதனை இழக்கிறீர்கள் என்று அவ்வப்போது யோசியுங்கள்.எந்த மனிதனும் பணம் சம்பாதிபதற்காக ஏதோ ஒன்றை இழக்கிறான்.  புத்திசாலி மனிதன் தன்னுடைய உழைப்பு மற்றும் திறமையை கொடுக்கிறான்.முட்டாள் தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான்." சொன்னவர் - ப்ருஸ் பர்டன் 

படித்ததில் பிடித்தது!

பாதையைத் தேடாதே... உருவாக்கு...