யதார்த்தம்!

சில பேருக்கு அவ்வபோது தோன்றும் இந்த கேள்வி!

யதார்த்தம் என்றல் என்ன?

கண்முன் நடக்கும் சாதாரண விஷயங்கள் எல்லாம் யதார்த்தம் தானோ!!

யதார்த்தம் என்பது நிதர்சனம், உண்மை நடப்பு, இப்பொழுது நடக்கும் ஒரு செயல்...

உண்மையில் யதார்த்தம் என்பதை நமக்குள் புரிந்து கொண்டிருந்தால் எந்த வித சச்சரவுகளும் கண்டிப்பாக வராது. யதார்த்தவாதிகள் உண்மையை மையம் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படுவது தொட்டில் பழக்கம். ஆராய்ந்து செயல் படுவது என்றல் நேரத்தை வீணடித்து சிந்திப்பது அல்ல...

அது சிந்தனையை சீர் தூக்கி எடுக்கப்படும் ஒரு முடிவு! யாரை எல்லாம் பாதிக்குமோ அவர்களை எண்ணி ஆராய்வது..

ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம்.

எனக்கு பிடித்த யதார்த்தவாதி நவ-திருப்பதி பகுதிகளில் உள்ள ஒரு சிவன் கோவில் அய்யர். எப்படி என்றால்.. என் நெற்றியில் திருநீறு வைத்துவிடும் போது  என் கண்களில் தூசி விழ கூடாது என்பதற்காக சிவனை
நினைத்து சிந்தையை திறந்துகொள்; கண்களை மூடிக்கொள்; என்று தான் அறிந்த யதார்த்தத்தை எனக்காக பயன்படுத்தினார். 

இன்னொருவர் சாப்பிடும் போது இலையை சுற்றி வட்ட வடிவில் தண்ணீரை லேசாக விட்டுகொண்டே பெருமாளை பற்றி ஒரு பாட்டு பாடி
கொண்டிருந்தார். நான் அவரிடம் சிரித்துகொன்டே "என்ன சுவாமிஜி தண்ணிய குடிக்காம சாப்பிடுற இலைய சுத்தி நீர் வேலி போடுறீங்க?" என்றேன்.  அவரும் சிரித்துக் கொண்டே "டேய் கண்ணா! நான் சாப்பிடுறதுக்கு முன்னாடி பெருமாளை நினைப்பேன். பிரார்த்தனை பண்ணுவேன். சாப்பிடும் போது தரையில் உக்காந்து சாப்பிடுவேன். அப்போ தரையில் இருக்குற எறும்பு போல சின்ன சின்ன பூச்சிகள்'லாம் சாப்பாடு வாசனைக்கு இலையை நோக்கி வரும். (மாமி நல்ல சமைப்பாங்க!!??)அப்படி வந்தா  நாம அதுகளை விரட்டுவோம். இப்படி ஒரு சிச்சுவேசன் வர கூடாதுன்றதுக்காக சப்ப்டிடுற இலையை சுத்தி நான் கொஞ்சம் தண்ணீர் விடுவேன். தண்ணீர் ஒரு சின்ன வேலி போல இருந்து அந்த ஜீவராசிகள திசை திருப்பி விட்டுடும்."


அப்போதான் நான் யோசிக்க ஆரம்பிச்சேன். நம்ம லைப் ல எதாவது இப்டி பண்ணனும்னு. நீங்களும் இப்டி எதாவது ட்ரை பண்ணுங்களேன்!

இப்பல்லாம் எது பண்ணலும் யோசிக்க வேண்டி இருக்கு! சீக்கிரமா என்ன யோசிச்சேன்னு ஒரு blog  எழுதறேன் நான்!

யதார்த்தவாதிகள் யாராவது  இத படிச்சா நான் எதையோ சொல்ல வந்து எங்கயோ போயடேனு நினைப்பாங்க!!!!


படிக்க நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி!

Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

அழகும் அவலட்சணமும்