மரணத்தின் பயணம்!!!

ஒரு நாள் பிறந்த நாளும், இறந்த நாளும் திடீரென்று சந்தித்துக் கொண்டனர். உண்மையில் அன்று பிறந்த நாளுக்கு பிறந்த நாள், இறந்த நாளுக்கு இறந்த நாள். இருவருக்குமே முக்கியமான இந்த நன்னாளில்??!! தத்தமது மகிழ்சிக்காக மிகுந்த விமரிசையாக கொண்டாட்டங்களை நடத்தினார்கள்.!!!

பிறப்பு தனது பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், இறப்பு தனது இறந்த நாளை மிகவும் வருத்ததுடனும் அவரவர் பாணியில் கொண்டாடினர்.

இந்த இருவர் மனதிலும் எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. இதனைப் பற்றி பேசுவதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக நினைத்தனர் இந்த கொண்டாட்ட தினத்தை...

உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு முக்கியமான நாட்கள் (தருணங்கள்) உள்ளன. அது அந்த உயிர் இந்த உலகிற்கு வந்த நாள் மற்றும் இந்த உலகில் இருக்கும் கடைசி நாள்! இது நாள் கணக்கு. இதனை பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்றும் சொல்லலாம்...

இதில் முதல் நாள் "பிறந்த நாள்", இறுதி நாள் "இறந்த நாள்" (இதையும் கூட பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்று சொல்லலாம்)

இந்த 2 நாட்களுக்கும் அல்லது நொடிகளுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு இடைவெளி நாம் எல்லோரும் வாழும் வாழ்க்கைப் பயணம். உண்மையில் அது ஒரு மரணத்தை நோக்கிய உன்னதமான பயணம்.

மரணத்தை நோக்கி செல்வது ஒரு உன்னதமான பயணமா? என்ன சொல்கிறாய் நீ?

மரணம் மட்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும், உயிருக்கும் இனி எந்த இன்னலும் இல்லை என்று உறுதி அளிக்கும் சாசனமல்லவா!

மரணம் என்பது எப்பொழுதும் முடிவாக பார்க்கப் படாமல்  மகிழ்ச்சியின் தொடக்கமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று!

மரணம் மண்ணுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை மரணமடையச் செய்யும் ஒரு சிறந்த தருணமல்லவா!

மரணதிற்கு பிறகும் தங்கள் பெயர் நிலைக்குமாறு செய்தவர்கள் மரணத்தை வென்றவர்கள். ஆனாலும் இந்த மரணம் மட்டும் அவர்களுக்கு ஒரு முடிவை தந்திருக்காவிடில் அவர்களால் நிச்சயம் மரணத்தை வென்றவர் என்று பெயர் எடுத்திருக்க முடியாது!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மரணத்தை நாம் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என்றும், எனவே மரணத்தை நோக்கி செல்வது ஒரு உன்னதமான பயணம் என்பது என்றென்றும் மறுக்க முடியாத உண்மை ஆகும்!

இப்படியாக பேசிக்கொண்டே பிறந்த நாளும், இறந்த நாளும் தங்கள் பாதையில் பிரிந்து சென்று விட்டனர்!


இந்த குழப்பமான தர்க்க  வாதத்தை பொறுமையாக படித்த உங்களுக்கு பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்!

Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

அழகும் அவலட்சணமும்