Posts

காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...

Image
மத்திய அரசு பணியில் சேர்நது முழுமையாக 1 வருடம், 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகி விட்டன. இன்னமும் 'அந்த முதல் பணி' முழுமையடையவில்லை. எப்பொழுது முடியும் என்று காத்திருக்கிறேன். என்னுடைய குழந்தை, சிறுவனாக வளரும் நிலையை எட்டிப் பிடிக்கப் போகிறான். மழலை மொழி இன்னமும் இருந்தாலும், அவன் வளரத் துவங்கி விட்டான். எந்த வேலைக்காக சேர்க்கப்பட்டேனோ அந்த வேலையை நான் இன்னமும் தொடங்கவில்லை என் நிறுவனத்தில், யாருக்காக இந்த வேலைக்கு வேலைக்கு சேர்ந்தேனோ அவனுடனும் இருக்க முடியவில்லை... காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...

மத்திய அரசு பணி - முதல் பொறுப்பு

Image
மத்திய  அரசு பணியில் சேர்ந்து இன்றோடு முழுதாக 4 மாதங்கள்  மற்றும் 7 நாட்கள் ஆகிவிட்டன.  வேலை என்று பார்த்தால் swach bharat திட்டத்தின் வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பது தான்.  இந்த வேலைக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும்  சென்று, அங்கு பள்ளி உள்ளதா, குழந்தைகள்  உள்ளனரா, இருந்தால் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், ஏற்கனவே கழிப்பறை உள்ளதா? இருந்தால் எத்தனை  உள்ளது? புதிதாக எவ்வளவு கழிப்பறைகளை கட்ட  வேண்டும் என்று பரிந்துரைகள் செய்வதும் இதில் அடக்கம்.
கண்டேன்!
தனிமை என்பது ஒருசில நேரங்களில் வரம்! வேறு சில நேரங்களில் சாபம்! நான் இன்று அனுபவிப்பது இரண்டாவது வகை! திடீரென ஒருநாள் எனக்கு மிகவும் பிடித்த, என் வாழ்வின் அர்த்தமாக நினைத்த 'அந்த' விஷயம் என் கண்களிலிருந்து சிரித்துக் கொண்டே மறைந்து விட்டது... மீண்டும் காண விழைகிறேன்...

சோப்புத் தூள் கம்பெனி!

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு .இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான். அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்குஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு. இந்தியன்டா. படித்ததில் பிடித்தது 

காமிக்ஸ் காதல் சென்னை புத்தக கண்காட்சியில்...

Image
வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பின் நான் உங்களை சந்திக்கிறேன். இந்த பதிவின் மூலம் கடந்த மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நன் முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன் மற்றும் திரு.S.விஜயனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவே எழுதுகிறேன். காத்திருங்கள் விரைவில் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்! நன்றி!

அழகும் அவலட்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன. நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது. பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது. அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான அழகை சந்தித்த  சிலர்,  அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள்.  வேறு சிலர் அழகான  உடை அணிந்த அவலச்சணத்தின்   அழகில்   மயங்கி   கொண்டாடி கொண்டிருகிறார்கள்...