ரேஷன் அரிசி கடத்துறவங்களே புடிக்க சொன்ன..!! ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்களே புடிச்சிட்டு இருக்காங்கே..!!! சிக்னல்லயே விட்டு தராத மனிதன் வாழ்வின் சிக்கல்களில் எப்படி விட்டு தர முடியும் குழந்தைகளுக்கு காய்ச்சலை பற்றி எல்லாம் பயம் இல்லை..ஊசியை நினைத்துதான்...! அன்பை அடகு வைத்தவர்க்கு மரியாதை கிடைக்காமல் போகும்..!!! கஷ்டத்துலே இருக்குறவங்கிட்ட காசுகேட்ட கஷ்டப்பட்டாவது ஏற்பாடு பண்ணுவாங்க,காசு இருக்குறவங்கிட்ட காசு கேட்ட கஷ்டத்துலே இருக்குறேன்னு சொல்வாங்க. பிரைவேட் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆகி ரெண்டு நாள் வரை எதுவும் சொல்லலேன்னா, நம்ம பேங்க் பேலன்ஸ் செக் பன்றாங்கன்னு அர்த்தம்..!! மற்றவர் போதைக்கு நாம் சரக்காக இருக்கிறோமா இல்லை, ஸைடு டிஷ்ஷாக இருக்கிறோமா என்பதே அவரிடம் நம்மின் முக்கியத்துவம் என்றறிக!!! பணம் உன்னிடத்தில் இருந்தால் வழிப்போக்கனும் உனக்கு சொந்தம் அது உன்னிடத்தில் இல்லையெனில் சொந்தத்திற்கும் நீங்கள் வழிப்போக்கன் ! நன்றி!
Comments
Post a Comment