அழகும் அவலட்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன.

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன

சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது.

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நிஜமான அழகை சந்தித்த 
சிலர், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். 

வேறு சிலர் அழகான  உடை அணிந்த அவலச்சணத்தின்   அழகில்  மயங்கி கொண்டாடி கொண்டிருகிறார்கள்...

Comments

  1. நல்ல கதை.... தொடரட்டும் உங்கள் குட்டி கதைகள்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!