கண்டேன்!
Posts
சோப்புத் தூள் கம்பெனி!
- Get link
- X
- Other Apps
ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு .இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான். அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்குஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு. இந்தியன்டா. படித்ததில் பிடித்தது
காமிக்ஸ் காதல் சென்னை புத்தக கண்காட்சியில்...
- Get link
- X
- Other Apps
வணக்கம் நண்பர்களே! வெகு நாட்களுக்கு பின் நான் உங்களை சந்திக்கிறேன். இந்த பதிவின் மூலம் கடந்த மாதம் நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் நன் முத்து காமிக்ஸ் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன் மற்றும் திரு.S.விஜயனுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பகிர்ந்து கொள்ளவே எழுதுகிறேன். காத்திருங்கள் விரைவில் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்! நன்றி!
அழகும் அவலட்சணமும்
- Get link
- X
- Other Apps
ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன. நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது. பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது. அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான அழகை சந்தித்த சிலர், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகான உடை அணிந்த அவலச்சணத்தின் அழகில் மயங்கி கொண்டாடி கொண்டிருகிறார்கள்...
ஆசை
- Get link
- X
- Other Apps
சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். ஜென் குருவிடம் அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். குரு "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளா ல் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான். ஜென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். கதை - 1 உணர்த்தியது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் இருவரையும் ஒரே விதமாய் நடத்த வேண்டும் என்பதே இந்த கதை சொல்லும் செய்தி என கருதுகிறேன்..
ஜென் - சிறுவனும் குருவியும்