Posts

நீயே என் சிறகு...!!!

நான் தனியே சுற்றி திரியும் ஒரு பறவை என்னுடைய எல்லா பயணங்களும் ஒரே ஒரு நோக்கத்துடன் மட்டுமே இருக்கும் அது என் சிறகுகளை தேடுவது மட்டுமே! நீ என்னுடைய சிறகாக  இருக்கும் வரையில் நான் உயிர் விட்டு பறக்க மாட்டேன்...

நான்காவது பெட்டி!!!

சென்ற வாரம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல நான் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை-க்கு பறக்கும் ரயிலில் ஏறினேன். அது மாலை 7 :00 மணி - வெள்ளிக்கிழமை வேறு. பொதுவாக கணினி மற்றும் கணினி சார்ந்த துறைகளில் பணி புரிபவர்கள் அதிகமாக ரயிலில் பயணிக்கும் நேரம் அது. நானும் வழக்கம் போல எஞ்சினில் இருந்து 3 வது பெட்டியில் ஏறிக்கொண்டேன். எனக்கு அடுத்த 4 வது பெட்டி vendor coach என்னும் சரக்குகள் வைக்கும் பெட்டி. வழக்கமாக மிகவும் அதிகமானவர்கள் நின்று செல்லும் பெட்டி அதுவாகத்தான் இருக்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டியில் ஆட்கள் இல்லை - மன்னிக்கவும் - 2 பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் மன்னிக்கவும்-3 பேர் இருந்தனர் - 3 ல் 2  பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். இன்னொருவர் பிணமாக இருந்தார் (அவனா இல்லை அவளா?). மீதமுள்ள இரண்டு பேரும் அந்த பிணத்திற்கு பாடிகார்ட். எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து ரயில்வே நடைபாதையில் அநாதை பிணமாக விழுந்து இப்பொழுது அதே ரயிலில் சென்னை சென்ட்ரல்-ல் உள்ள பொது மருத்துவமனைக்கு இருவர் துணையுட...

கோபம் என்னும் சக்தி!

திடீரென்று என் மனம் என்னிடம் இப்படி பேச தொடங்கியது: சமீப நாட்களாக எனக்கு அதிகமான மிகவும் வேகமாக கோபம் வருகிறது. ஆனால் அதனை நான் எனக்குள் மிகுந்த அழுத்தம் கொடுத்து வெளியே வராமல் தடுத்து கொண்டிருக்கிறேன். எல்லா வகை ஆயுதங்களையும் பயன்படுத்தும் வீரனை கண்டு எனக்கு பயம் இல்லை. ஆனால் என்னுடைய கோபத்தை கண்டு பயப்பட வேண்டி இருக்கிறது. என்னுடைய கோபத்தினால் நான் இழந்த விஷயங்கள் என்னை பயப்பட வைக்கிறது. அந்த பயம் என்னை துரத்துகிறது. "எங்கே என் கோபம் எனக்கு பிடித்தவர்களை என்னிடம் இருந்து பிரித்து விடுமோ என்று என்னும்போது என் கோபம் சிரிப்பாக, சிந்தனையாக வேறு உருவம் எடுக்கிறது." நான் கடந்து வந்த பாதையை பார்த்த போது நான் எங்கெல்லாம் கோபப்பட்டு மிக உறுதியாக இருந்திருக்கிறேனோ அங்கெல்லாம் நிறைய இழப்புகளை சந்தித்திருக்கிறேன். ஆனால் இழப்புகளுக்காக நான் இதுவரை வருத்தப்பட்டதில்லை. இன்று இழப்புகளுக்காக நான் அஞ்சுகிறேன். விடியல் வரும் வரை விழித்திருக்கப் போகிறேன்! நன்றி...

Discover Yourself!

The purpose of life is to discover your gift; The value of life is to give it away!

மரணத்தின் பயணம்!!!

ஒரு நாள் பிறந்த நாளும், இறந்த நாளும் திடீரென்று சந்தித்துக் கொண்டனர். உண்மையில் அன்று பிறந்த நாளுக்கு பிறந்த நாள், இறந்த நாளுக்கு இறந்த நாள். இருவருக்குமே முக்கியமான இந்த நன்னாளில்??!! தத்தமது மகிழ்சிக்காக மிகுந்த விமரிசையாக கொண்டாட்டங்களை நடத்தினார்கள்.!!! பிறப்பு தனது பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், இறப்பு தனது இறந்த நாளை மிகவும் வருத்ததுடனும் அவரவர் பாணியில் கொண்டாடினர். இந்த இருவர் மனதிலும் எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. இதனைப் பற்றி பேசுவதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக நினைத்தனர் இந்த கொண்டாட்ட தினத்தை... உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு முக்கியமான நாட்கள் (தருணங்கள்) உள்ளன. அது அந்த உயிர் இந்த உலகிற்கு வந்த நாள் மற்றும் இந்த உலகில் இருக்கும் கடைசி நாள்! இது நாள் கணக்கு. இதனை பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்றும் சொல்லலாம்... இதில் முதல் நாள் "பிறந்த நாள்", இறுதி நாள் "இறந்த நாள்" (இதையும் கூட பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்று சொல்லலாம்) இந்த 2 நாட்களுக்கும் அல்லது நொடிகளுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு இடைவெளி நாம...

நானும் நீயும்!

நம்மைப் பற்றி நினைக்கும் போது கலீல் கிப்ரானின், இந்த  வரிகள் என் எண்ணங்களில் வந்து செல்வதை தவிர்த்திட முடியவில்லை... "ஓ என் நண்பனே! நீ என் நண்பனல்ல; ஆனால் இதை எப்படி நான் உனக்கு புரிய வைப்பேன்? என் வழி தனி வழி; அது உன் வழியல்ல; இருந்தாலும் நாம் இருவரும் கையோடு கை கோர்த்து ஒன்றாக இணைந்து நடக்கின்றோம்!" அது அப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் இன்று நான் உறங்க விழி மூடினால் என் இமைகளுக்கு நடுவில் நீ! மீளாத்துயிலில் நான் செல்லும் முன் என் முன்னால் நீ வந்து விடு என் இரவல் பெற்ற உயிராக! படிக்க நேரம் ஒதுக்கிய தங்களுக்கு நன்றி!