Posts

இன்று நான் படித்து இரசித்த ட்வீட்டுக்கள்

ரேஷன் அரிசி கடத்துறவங்களே புடிக்க சொன்ன..!! ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்களே புடிச்சிட்டு இருக்காங்கே..!!! சிக்னல்லயே விட்டு தராத மனிதன் வாழ்வின் சிக்கல்களில் எப்படி விட்டு தர முடியும் குழந்தைகளுக்கு காய்ச்சலை பற்றி எல்லாம் பயம் இல்லை..ஊசியை நினைத்துதான்...! அன்பை அடகு வைத்தவர்க்கு மரியாதை கிடைக்காமல் போகும்..!!! கஷ்டத்துலே இருக்குறவங்கிட்ட காசுகேட்ட கஷ்டப்பட்டாவது ஏற்பாடு பண்ணுவாங்க,காசு இருக்குறவங்கிட்ட காசு கேட்ட கஷ்டத்துலே இருக்குறேன்னு சொல்வாங்க. பிரைவேட் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆகி ரெண்டு நாள் வரை எதுவும் சொல்லலேன்னா, நம்ம பேங்க் பேலன்ஸ் செக் பன்றாங்கன்னு அர்த்தம்..!! மற்றவர் போதைக்கு நாம் சரக்காக இருக்கிறோமா இல்லை, ஸைடு டிஷ்ஷாக இருக்கிறோமா என்பதே அவரிடம் நம்மின் முக்கியத்துவம் என்றறிக!!! பணம் உன்னிடத்தில் இருந்தால் வழிப்போக்கனும் உனக்கு சொந்தம் அது உன்னிடத்தில் இல்லையெனில் சொந்தத்திற்கும் நீங்கள் வழிப்போக்கன் ! நன்றி!

முதல் பணியின் முடிவு!

என்னுடைய  முதல் பணியை முடிந்த வரையிலும் சிறப்பாக செய்து விட்டு, கடந்த வாரம் (16th May  2016) எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த சந்திராபூர் நகரத்தில் புதிய பொறுப்புகளுக்காக சேர்ந்து விட்டேன்!...

காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...

Image
மத்திய அரசு பணியில் சேர்நது முழுமையாக 1 வருடம், 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகி விட்டன. இன்னமும் 'அந்த முதல் பணி' முழுமையடையவில்லை. எப்பொழுது முடியும் என்று காத்திருக்கிறேன். என்னுடைய குழந்தை, சிறுவனாக வளரும் நிலையை எட்டிப் பிடிக்கப் போகிறான். மழலை மொழி இன்னமும் இருந்தாலும், அவன் வளரத் துவங்கி விட்டான். எந்த வேலைக்காக சேர்க்கப்பட்டேனோ அந்த வேலையை நான் இன்னமும் தொடங்கவில்லை என் நிறுவனத்தில், யாருக்காக இந்த வேலைக்கு வேலைக்கு சேர்ந்தேனோ அவனுடனும் இருக்க முடியவில்லை... காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...

மத்திய அரசு பணி - முதல் பொறுப்பு

Image
மத்திய  அரசு பணியில் சேர்ந்து இன்றோடு முழுதாக 4 மாதங்கள்  மற்றும் 7 நாட்கள் ஆகிவிட்டன.  வேலை என்று பார்த்தால் swach bharat திட்டத்தின் வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பது தான்.  இந்த வேலைக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும்  சென்று, அங்கு பள்ளி உள்ளதா, குழந்தைகள்  உள்ளனரா, இருந்தால் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், ஏற்கனவே கழிப்பறை உள்ளதா? இருந்தால் எத்தனை  உள்ளது? புதிதாக எவ்வளவு கழிப்பறைகளை கட்ட  வேண்டும் என்று பரிந்துரைகள் செய்வதும் இதில் அடக்கம்.
கண்டேன்!
தனிமை என்பது ஒருசில நேரங்களில் வரம்! வேறு சில நேரங்களில் சாபம்! நான் இன்று அனுபவிப்பது இரண்டாவது வகை! திடீரென ஒருநாள் எனக்கு மிகவும் பிடித்த, என் வாழ்வின் அர்த்தமாக நினைத்த 'அந்த' விஷயம் என் கண்களிலிருந்து சிரித்துக் கொண்டே மறைந்து விட்டது... மீண்டும் காண விழைகிறேன்...

சோப்புத் தூள் கம்பெனி!

ஜப்பானில் ஒருத்தன் சோப்புத் தூள் கம்பெனி வச்சிருந்தான். அங்கு சோப்புத் தூள் அதுவாவே பாக்கட்டில் நிரம்பி அதுவே பேக் பண்ணிக்கும்.அதில் ஒரு சின்ன தப்பு வந்தது. சில பாக்கட்டுகளில் தூள் நிரம்பாமலேயே பேக் ஆச்சு .இதை தடுக்க அமெரிக்காவில் இருந்து ஒரு ஸ்கேன் மெசின் ஏழாயிரம் டாலர் கொடுத்து வாங்கினான். அது துல்லியமா சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகளைக் காமிச்சது. அவனும் அவைகளை ஈசியா ஒதுக்கினான். அதே போல் இந்தியாவில் ஒரு சோப்புத் தூள் கம்பெனியிலும் ஆச்சு. அவன் என்ன பண்ணி இருப்பான்? எழுநூறு ரூபாய்க்குஒரு FAN வாங்கி நடுவில் ஓட விட்டான். சோப்புத் தூள் இல்லாத பாக்கட்டுகள் காற்றில் பறந்துடுச்சு. இந்தியன்டா. படித்ததில் பிடித்தது