வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

"உன் வார்த்தைகளை விட உன் மவுனம் மிகவும் கொடுமையானது!"
இந்த அளவு உன்னை பற்றி என்னை நினைக்க வைத்த  போதும் விளங்கவில்லை எனக்கு உன்னுடன் என்ன வகை உறவு என்று....

உன்னுடன் சாதரணமாக பேசிய நாட்களில் எல்லாம் இது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்றும் நான் கனவும் காணவில்லையடி என் கண்ணம்மா!

திரைப்படம் ஒன்றில் கேட்டேன் ஒரு வசனத்தை இப்படி:  அது வைரமுத்துவின் வைர வரிகள் என்கிறது என் நினைவு பேழை:
அந்த வரிகளை எனக்கு, என் உணர்வுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திய போதும் எனக்கு தெரியவில்லை உன்னுடன் என்ன வகை உறவு என்று....

அது விளங்காமல் போனதால் தான் நான் சொல்ல வந்த அந்த வரிகளை இன்னும் தட்டச்சு செய்யாமல் இழுத்து கொண்டிருக்கிறேனோ! இது என்ன கொடுமை என்று படிக்கும் நீ நினைக்கலாம்!

ஆம்! நான் புலம்புவதற்கு படிக்கும் நீ ஏன் குழம்ப வேண்டும்!??!

என் செல்வமே! இதோ அந்த வரிகளை இனியும் தாமதம் இல்லாமல் உனக்கு நான் தருகிறேன்...

"காக்கை குருவி கூட உன்னை கண்டு கொள்ளாது, ஆனால்  உலகமே உன்னை பார்த்து கொண்டிருப்பதாக நீ நினைப்பாய்"

படிக்க நேரம் ஒதுக்கிய உங்களுக்கு என் நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

அழகும் அவலட்சணமும்