வெறுப்பின் வலி...!
இந்த வாழ்க்கை இருக்கிறதே, அது நாம் வேறு வழியில்லாமல் வாழும் வேளைகளில் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும். உண்மையாகவே, வாழ நினைக்கையில் சாகடித்து விடும். வெறுப்பு தான் வாழ்க்கையோ என்ற எண்ணம் தலைக்கேறும் போது,
இந்த வரிகளே எனக்குள் அடிக்கடி தோன்றுகின்றன!
நம்முடைய மனதுக்குப் பிடித்த ஒருவரின் பக்கம் நமது கவனத்தை திருப்பி வைக்க நாம் எத்தனையோ சில்மிஷங்களை செய்திருப்போம்!
சில்மிஷங்கள் என்று சொல்வது நாம் செய்யும் ஆத்மார்த்தமான முயற்சிகளை தான்!!!
இப்படி நமக்கு மனதுக்கு மிகவும் நெருக்கத்தில் உள்ளவரை விரும்பச் செய்யும் முயற்சி தோல்வியடையும் போது மனம் சோர்வடையும், வருத்தம் அடையும், துவண்டு போகும்... 🫂😭
ஆம் இது ஒரு விதமான தோல்விதான்...
இந்த தோல்வியை எதிர்கொண்டு பெற்றுக் கொள்வது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும்!
இவற்றுக்கெல்லாம் நேர்மாறாக உங்கள் மனதுக்கு மிகவும் பிடித்த, விருப்பமான, நெஞ்சத்திற்கு நெருக்கமான ஒருவரை, உங்களை வெறுக்கச் செய்யும் முயற்சியில் ஒரு முறை ஒரே ஒரு முறை வெற்றி பெற்று பாருங்கள்...!
நீங்கள் இதுவரையில் வாழ்க்கையில் அனுபவித்திராத அத்தனை பெரிய வலியை அந்த வெற்றி உங்களுக்கு தண்டனையாக கொடுக்கும்!
இத்தனைக்கும் அவர் உங்களை வெறுக்க வேண்டும் என நினைத்தது நீங்கள் தான்!
இந்த இடத்தில் நீங்கள் விரும்பியவர் உங்களை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்ற நோக்கம், மேலே சொன்னது போல நீங்கள் விரும்பியவர் உங்களிடம் வந்து சேர வேண்டும் என்ற நோக்கம் தரும் வலியை விட மிக அதிகமான வலியை கொடுக்கும்...!
இப்படி நமக்கு பிடித்தமான நெஞ்சத்திற்கு நெருக்கமான ஒருவரை விலகி இருக்கச் செய்து, நம்மை வெறுக்க செய்து அதன் வலியை நாம் அனுபவிக்கும் வேதனையை எந்த வார்த்தையாலும் எழுத முடியாது! யாரிடமும் சொல்லவும் முடியாது!
Comments
Post a Comment