"உன் வார்த்தைகளை விட உன் மவுனம் மிகவும் கொடுமையானது!" இந்த அளவு உன்னை பற்றி என்னை நினைக்க வைத்த போதும் விளங்கவில்லை எனக்கு உன்னுடன் என்ன வகை உறவு என்று.... உன்னுடன் சாதரணமாக பேசிய நாட்களில் எல்லாம் இது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்றும் நான் கனவும் காணவில்லையடி என் கண்ணம்மா! திரைப்படம் ஒன்றில் கேட்டேன் ஒரு வசனத்தை இப்படி: அது வைரமுத்துவின் வைர வரிகள் என்கிறது என் நினைவு பேழை: அந்த வரிகளை எனக்கு, என் உணர்வுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திய போதும் எனக்கு தெரியவில்லை உன்னுடன் என்ன வகை உறவு என்று.... அது விளங்காமல் போனதால் தான் நான் சொல்ல வந்த அந்த வரிகளை இன்னும் தட்டச்சு செய்யாமல் இழுத்து கொண்டிருக்கிறேனோ! இது என்ன கொடுமை என்று படிக்கும் நீ நினைக்கலாம்! ஆம்! நான் புலம்புவதற்கு படிக்கும் நீ ஏன் குழம்ப வேண்டும்!??! என் செல்வமே! இதோ அந்த வரிகளை இனியும் தாமதம் இல்லாமல் உனக்கு நான் தருகிறேன்... "காக்கை குருவி கூட உன்னை கண்டு கொள்ளாது, ஆனால் உலகமே உன்னை பார்த்து கொண்டிருப்பதாக ந...
ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்து கொண்டன. நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன சிறிது நேரம் கழித்து குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது. பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது. அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நிஜமான அழகை சந்தித்த சிலர், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகான உடை அணிந்த அவலச்சணத்தின் அழகில் மயங்கி கொண்டாடி கொண்டிருகிறார்கள்...
Comments
Post a Comment