"உன் வார்த்தைகளை விட உன் மவுனம் மிகவும் கொடுமையானது!" இந்த அளவு உன்னை பற்றி என்னை நினைக்க வைத்த போதும் விளங்கவில்லை எனக்கு உன்னுடன் என்ன வகை உறவு என்று.... உன்னுடன் சாதரணமாக பேசிய நாட்களில் எல்லாம் இது இப்படி ஒரு விளைவை ஏற்படுத்தும் என்றும் நான் கனவும் காணவில்லையடி என் கண்ணம்மா! திரைப்படம் ஒன்றில் கேட்டேன் ஒரு வசனத்தை இப்படி: அது வைரமுத்துவின் வைர வரிகள் என்கிறது என் நினைவு பேழை: அந்த வரிகளை எனக்கு, என் உணர்வுகளுக்கு மீண்டும் மீண்டும் நினைவு படுத்திய போதும் எனக்கு தெரியவில்லை உன்னுடன் என்ன வகை உறவு என்று.... அது விளங்காமல் போனதால் தான் நான் சொல்ல வந்த அந்த வரிகளை இன்னும் தட்டச்சு செய்யாமல் இழுத்து கொண்டிருக்கிறேனோ! இது என்ன கொடுமை என்று படிக்கும் நீ நினைக்கலாம்! ஆம்! நான் புலம்புவதற்கு படிக்கும் நீ ஏன் குழம்ப வேண்டும்!??! என் செல்வமே! இதோ அந்த வரிகளை இனியும் தாமதம் இல்லாமல் உனக்கு நான் தருகிறேன்... "காக்கை குருவி கூட உன்னை கண்டு கொள்ளாது, ஆனால் உலகமே உன்னை பார்த்து கொண்டிருப்பதாக ந...
மத்திய அரசு பணியில் சேர்நது முழுமையாக 1 வருடம், 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகி விட்டன. இன்னமும் 'அந்த முதல் பணி' முழுமையடையவில்லை. எப்பொழுது முடியும் என்று காத்திருக்கிறேன். என்னுடைய குழந்தை, சிறுவனாக வளரும் நிலையை எட்டிப் பிடிக்கப் போகிறான். மழலை மொழி இன்னமும் இருந்தாலும், அவன் வளரத் துவங்கி விட்டான். எந்த வேலைக்காக சேர்க்கப்பட்டேனோ அந்த வேலையை நான் இன்னமும் தொடங்கவில்லை என் நிறுவனத்தில், யாருக்காக இந்த வேலைக்கு வேலைக்கு சேர்ந்தேனோ அவனுடனும் இருக்க முடியவில்லை... காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...
Comments
Post a Comment