நானும் நீயும்!

நம்மைப் பற்றி நினைக்கும் போது கலீல் கிப்ரானின், இந்த  வரிகள் என் எண்ணங்களில் வந்து செல்வதை தவிர்த்திட முடியவில்லை...

"ஓ என் நண்பனே! நீ என் நண்பனல்ல; ஆனால் இதை எப்படி நான் உனக்கு புரிய வைப்பேன்? என் வழி தனி வழி; அது உன் வழியல்ல; இருந்தாலும் நாம் இருவரும் கையோடு கை கோர்த்து ஒன்றாக இணைந்து நடக்கின்றோம்!"



அது அப்படித்தான் இருக்கும் என்ற எண்ணத்துடன் இன்று நான் உறங்க விழி மூடினால் என் இமைகளுக்கு நடுவில் நீ!

மீளாத்துயிலில் நான் செல்லும் முன் என் முன்னால் நீ வந்து விடு என் இரவல் பெற்ற உயிராக!

படிக்க நேரம் ஒதுக்கிய தங்களுக்கு நன்றி!

Comments

Popular posts from this blog

வைரமுத்துவின் வைர வரிகளில் என் எண்ண ரேகைகள்!

முடிந்த உறவு

அழகும் அவலட்சணமும்