Posts

மறதி!

 மறக்க முடியாத ஒரு ''முகம்'', ஒரு ''குரல்'', ஒரு ''பெயர்'' ஆனால், மறைக்கப்பட்டது என்னமோ என்னுள் மட்டும்

Bounce Back...!

Image
  Yes.  I fall and failed. I have made mistkes.  Remember, this is not end.  Like before, I’ll bounce back—this time in full color...

Leave

 "i realised that there was a better solution …. yeah much better much easier .. i could simply leave …. go away from her …. that should be the perfect response … ignore her , disappear .. vanish .. just like a bubble"

உன்னை நினைத்து...!

நாள் முழுதும் பேச. நினைத்து! நல் முத்தம் கொடுக்க நினைத்து! நெஞ்சோடு இணைய நினைத்து! உயிர் கொடுக்கும் நட்பென நினைத்து! நாம் தலை சாய்ந்திருக்கும் தோளென நினைத்து! மனம் விரும்பும் காதலென நினைத்து! அடுத்த லைன் எழுதும் முன் கனவு வந்துடுச்சு! போய் தூங்குங்க!  (இந்த லைன் படிக்கும் போது கொஞ்சம் சிரிங்க, நானும் சிரிக்கிறேன்) குட் நைட்!

முடிந்த உறவு

என்னைப் பார்த்து, நீ இறந்து போனால் எனக்கொன்றும் கவலை இல்லை என்றாள் அவள்... உடைந்த மனதை ஒட்ட வைக்க மனமின்றி நான்...

நட்பு எதுவரை?

மனம் விட்டுப் பேச நண்பர்கள் இருந்தால், எந்தவிதமான மோசமான சூழல்களையும் சமாளித்து எழுந்து விட முடியும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதை எந்த சூழ்நிலையிலும் தவறாமல் நிலை பெற்றிருக்க விரும்புகிறேன்... கடந்த வாரம், எனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை, முதல் முறையாக யாருடனும் பகிர்ந்து   கொள்ளாமல் மனதில் இருத்தி வைத்து விட்டேன். எனக்கு நம்பிக்கை கொடுத்த நண்பர்கள் யாரும் அருகில் இருப்பதாகத் தோன்றவில்லையோ! உண்மை அப்படி இல்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தி! என்னுடைய பிரச்னைகளுக்கு நான் தான் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும், தேவையில்லாமல் என்னுடைய பிரச்னைகளை நண்பர்களிடம் கொண்டு செல்வதால் அதற்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மேலும், நான் கொண்டு செல்லும் பிரச்னை மிக்க தனிப்பட்ட செய்திகள், என்னுடைய நண்பர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் உள்ள அவர்களை சிந்திக்க விடாமல் செய்து விடும் என்ற அச்சமுமே காரணம்!!! நண்பர்கள் நட்பைப் பகிர்ந்து கொள்வதற்கே!!! நாளும் நட்புடன் இருக்க, நட்பை போற்றிடுவோம்!!!

இன்று நான் படித்து இரசித்த ட்வீட்டுக்கள்

ரேஷன் அரிசி கடத்துறவங்களே புடிக்க சொன்ன..!! ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்களே புடிச்சிட்டு இருக்காங்கே..!!! சிக்னல்லயே விட்டு தராத மனிதன் வாழ்வின் சிக்கல்களில் எப்படி விட்டு தர முடியும் குழந்தைகளுக்கு காய்ச்சலை பற்றி எல்லாம் பயம் இல்லை..ஊசியை நினைத்துதான்...! அன்பை அடகு வைத்தவர்க்கு மரியாதை கிடைக்காமல் போகும்..!!! கஷ்டத்துலே இருக்குறவங்கிட்ட காசுகேட்ட கஷ்டப்பட்டாவது ஏற்பாடு பண்ணுவாங்க,காசு இருக்குறவங்கிட்ட காசு கேட்ட கஷ்டத்துலே இருக்குறேன்னு சொல்வாங்க. பிரைவேட் ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆகி ரெண்டு நாள் வரை எதுவும் சொல்லலேன்னா, நம்ம பேங்க் பேலன்ஸ் செக் பன்றாங்கன்னு அர்த்தம்..!! மற்றவர் போதைக்கு நாம் சரக்காக இருக்கிறோமா இல்லை, ஸைடு டிஷ்ஷாக இருக்கிறோமா என்பதே அவரிடம் நம்மின் முக்கியத்துவம் என்றறிக!!! பணம் உன்னிடத்தில் இருந்தால் வழிப்போக்கனும் உனக்கு சொந்தம் அது உன்னிடத்தில் இல்லையெனில் சொந்தத்திற்கும் நீங்கள் வழிப்போக்கன் ! நன்றி!