சென்ற வாரம் அலுவலக பணி முடிந்து வழக்கம் போல நான் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் இருந்து சிந்தாதிரிபேட்டை-க்கு பறக்கும் ரயிலில் ஏறினேன். அது மாலை 7 :00 மணி - வெள்ளிக்கிழமை வேறு. பொதுவாக கணினி மற்றும் கணினி சார்ந்த துறைகளில் பணி புரிபவர்கள் அதிகமாக ரயிலில் பயணிக்கும் நேரம் அது. நானும் வழக்கம் போல எஞ்சினில் இருந்து 3 வது பெட்டியில் ஏறிக்கொண்டேன். எனக்கு அடுத்த 4 வது பெட்டி vendor coach என்னும் சரக்குகள் வைக்கும் பெட்டி. வழக்கமாக மிகவும் அதிகமானவர்கள் நின்று செல்லும் பெட்டி அதுவாகத்தான் இருக்கும். இன்று வழக்கத்திற்கு மாறாக அந்த பெட்டியில் ஆட்கள் இல்லை - மன்னிக்கவும் - 2 பேர் மட்டும் இருந்தனர். மீண்டும் மன்னிக்கவும்-3 பேர் இருந்தனர் - 3 ல் 2 பேர் மட்டும் உயிருடன் இருந்தனர். இன்னொருவர் பிணமாக இருந்தார் (அவனா இல்லை அவளா?). மீதமுள்ள இரண்டு பேரும் அந்த பிணத்திற்கு பாடிகார்ட். எங்கேயோ பிறந்து எப்படியோ வளர்ந்து ரயில்வே நடைபாதையில் அநாதை பிணமாக விழுந்து இப்பொழுது அதே ரயிலில் சென்னை சென்ட்ரல்-ல் உள்ள பொது மருத்துவமனைக்கு இருவர் துணையுட...