ஒரு நாள் பிறந்த நாளும், இறந்த நாளும் திடீரென்று சந்தித்துக் கொண்டனர். உண்மையில் அன்று பிறந்த நாளுக்கு பிறந்த நாள், இறந்த நாளுக்கு இறந்த நாள். இருவருக்குமே முக்கியமான இந்த நன்னாளில்??!! தத்தமது மகிழ்சிக்காக மிகுந்த விமரிசையாக கொண்டாட்டங்களை நடத்தினார்கள்.!!! பிறப்பு தனது பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், இறப்பு தனது இறந்த நாளை மிகவும் வருத்ததுடனும் அவரவர் பாணியில் கொண்டாடினர். இந்த இருவர் மனதிலும் எப்பொழுதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. இதனைப் பற்றி பேசுவதற்கு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக நினைத்தனர் இந்த கொண்டாட்ட தினத்தை... உலகத்தில் உள்ள உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு முக்கியமான நாட்கள் (தருணங்கள்) உள்ளன. அது அந்த உயிர் இந்த உலகிற்கு வந்த நாள் மற்றும் இந்த உலகில் இருக்கும் கடைசி நாள்! இது நாள் கணக்கு. இதனை பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்றும் சொல்லலாம்... இதில் முதல் நாள் "பிறந்த நாள்", இறுதி நாள் "இறந்த நாள்" (இதையும் கூட பிறந்த நொடி மற்றும் இறந்த நொடி என்று சொல்லலாம்) இந்த 2 நாட்களுக்கும் அல்லது நொடிகளுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு இடைவெளி நாம...