மனம் விட்டுப் பேச நண்பர்கள் இருந்தால், எந்தவிதமான மோசமான சூழல்களையும் சமாளித்து எழுந்து விட முடியும் என்ற எண்ணம் எனக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதை எந்த சூழ்நிலையிலும் தவறாமல் நிலை பெற்றிருக்க விரும்புகிறேன்... கடந்த வாரம், எனக்கு நேர்ந்த ஒரு மோசமான அனுபவத்தை, முதல் முறையாக யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் மனதில் இருத்தி வைத்து விட்டேன். எனக்கு நம்பிக்கை கொடுத்த நண்பர்கள் யாரும் அருகில் இருப்பதாகத் தோன்றவில்லையோ! உண்மை அப்படி இல்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தி! என்னுடைய பிரச்னைகளுக்கு நான் தான் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும், தேவையில்லாமல் என்னுடைய பிரச்னைகளை நண்பர்களிடம் கொண்டு செல்வதால் அதற்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. மேலும், நான் கொண்டு செல்லும் பிரச்னை மிக்க தனிப்பட்ட செய்திகள், என்னுடைய நண்பர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் உள்ள அவர்களை சிந்திக்க விடாமல் செய்து விடும் என்ற அச்சமுமே காரணம்!!! நண்பர்கள் நட்பைப் பகிர்ந்து கொள்வதற்கே!!! நாளும் நட்புடன் இருக்க, நட்பை போற்றிடுவோம்!!!