காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...

மத்திய அரசு பணியில் சேர்நது முழுமையாக 1 வருடம், 2 மாதங்கள் மற்றும் 10 நாட்கள் ஆகி விட்டன. இன்னமும் 'அந்த முதல் பணி' முழுமையடையவில்லை. எப்பொழுது முடியும் என்று காத்திருக்கிறேன். என்னுடைய குழந்தை, சிறுவனாக வளரும் நிலையை எட்டிப் பிடிக்கப் போகிறான். மழலை மொழி இன்னமும் இருந்தாலும், அவன் வளரத் துவங்கி விட்டான். எந்த வேலைக்காக சேர்க்கப்பட்டேனோ அந்த வேலையை நான் இன்னமும் தொடங்கவில்லை என் நிறுவனத்தில், யாருக்காக இந்த வேலைக்கு வேலைக்கு சேர்ந்தேனோ அவனுடனும் இருக்க முடியவில்லை... காத்திருக்கிறேன் மகனே கிருத்திக்...