மத்திய அரசு பணி - முதல் பொறுப்பு

மத்திய அரசு பணியில் சேர்ந்து இன்றோடு முழுதாக 4 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் ஆகிவிட்டன. வேலை என்று பார்த்தால் swach bharat திட்டத்தின் வழியாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பது தான். இந்த வேலைக்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அங்கு பள்ளி உள்ளதா, குழந்தைகள் உள்ளனரா, இருந்தால் எத்தனை ஆண்கள் மற்றும் பெண்கள், ஏற்கனவே கழிப்பறை உள்ளதா? இருந்தால் எத்தனை உள்ளது? புதிதாக எவ்வளவு கழிப்பறைகளை கட்ட வேண்டும் என்று பரிந்துரைகள் செய்வதும் இதில் அடக்கம்.