சில பேருக்கு அவ்வபோது தோன்றும் இந்த கேள்வி! யதார்த்தம் என்றல் என்ன? கண்முன் நடக்கும் சாதாரண விஷயங்கள் எல்லாம் யதார்த்தம் தானோ!! யதார்த்தம் என்பது நிதர்சனம், உண்மை நடப்பு, இப்பொழுது நடக்கும் ஒரு செயல்... உண்மையில் யதார்த்தம் என்பதை நமக்குள் புரிந்து கொண்டிருந்தால் எந்த வித சச்சரவுகளும் கண்டிப்பாக வராது. யதார்த்தவாதிகள் உண்மையை மையம் கொண்டு வாழ்பவர்கள். அவர்களுக்கு எதையும் ஆராய்ந்து பார்த்து செயல் படுவது தொட்டில் பழக்கம். ஆராய்ந்து செயல் படுவது என்றல் நேரத்தை வீணடித்து சிந்திப்பது அல்ல... அது சிந்தனையை சீர் தூக்கி எடுக்கப்படும் ஒரு முடிவு! யாரை எல்லாம் பாதிக்குமோ அவர்களை எண்ணி ஆராய்வது.. ஒருவன் தவறு தான் செய்திருந்தாலும் அவனுக்கு அளிக்கப்படும் தண்டனை அவனை திருத்துவதாக தான் இருக்க வேண்டும் என்று சிந்திப்பது தான் யதார்த்தம். எனக்கு பிடித்த யதார்த்தவாதி நவ-திருப்பதி பகுதிகளில் உள்ள ஒரு சிவன் கோவில் அய்யர். எப்படி என்றால்.. என் நெற்றியில் திருநீறு வைத்துவிடும் போது என் கண்களில் தூசி விழ கூடாது என்பதற்காக சிவனை ...